தமிழகத்தில் எடப்பாடி யார் அலை வீசத் துவங்கியுள்ளது. ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் பேசியுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி குறித்த ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது…
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வரும் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றது.
இதனைக் கண்டு திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சி நடுங்குகின்றனர். மேலும் ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். எடப்பாடி அலை வீசத் துவங்கியுள்ளது. விடியா ஸ்டாலின் அரசு அவர்களும் குழம்பிக் கொண்டு. மக்களையும் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டாலின் அரசு மக்களுக்கான அரசு இல்லை. வெகுஜன விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். 2026 இல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.