தேர்தலுக்குப் பிறகு இன்டெக்ஸ் கார்டுகள் மற்றும் பல்வேறு புள்ளிவிவர அறிக்கைகளை உருவாக்க ஒரு தொழில்நுட்ப சார்ந்த, ஸ்ட்ரீம்லைன் செய்யப்பட்ட அமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் உருவாகக் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய தலைவர் ஞானேஷ் குமாரின் தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய குழுவினர் இதனை உருவாக்கி உள்ளனர்.

இன்டெக்ஸ் கார்டு என்பது, தேர்தலுக்குப் பிறகு தயாரிக்கப்படும், சட்டப்பூர்வமற்ற ஒரு புள்ளிவிவர அறிக்கை வடிவமாகும். இது தொகுதி மட்டத்திலான தேர்தல் தொடர்பான தகவல்களை ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது வேட்பாளர்கள், வாக்காளர்கள், பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள், கட்சி மற்றும் வேட்பாளர் அடிப்படையிலான வாக்குப் பங்குகள், பாலின அடிப்படையிலான வாக்குப்பதிவு நடைமுறைகள், பிராந்திய வேறுபாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்திறன் போன்ற பல பரிமாணங்களிலான தரவுகளை வழங்குகிறது.

இந்த அறிக்கைகள் மாநிலம்/தொகுதி/சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் விவரங்கள், வாக்குச்சாவடி எண்ணிக்கை, மாநில மற்றும் தொகுதி வாரியான வாக்களிப்பு விவரங்கள், பெண்கள் வாக்காளர்களின் பங்கேற்பு, தேசிய/மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகளின் செயல்திறன், வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பகுப்பாய்வு, தொகுதி வாரியான முடிவுகள் மற்றும் சுருக்கமான தரவுகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த தரவுகளால் செறிவான தேர்தல் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும்; இதன் மூலம் ஜனநாயக உரையாடல் வலுப்பெறும். இருப்பினும், இந்த புள்ளிவிவர அறிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். இவை இன்டெக்ஸ் கார்டுகளில் உள்ள இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன; முதல் நிலை மற்றும் இறுதியான தரவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் (Returning Officers) வைத்திருக்கும் சட்டப்பூர்வ படிவங்களில் மட்டுமே இருக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version