எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 4-ம் கட்ட சுற்றுப்பயணம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் முழு வீச்சில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியான உள்ள அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்தப் பயணம் மூன்று கட்டத்தை முடித்துள்ளது. அவரது 4-ம் கட்ட சுற்றுப்பயணமானது, செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 1.9.2025 முதல் 13.9.2025 வரை, நான்காம் கட்டமாக கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 1-9-2025 (திங்கள்) – திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 2ம் தேதி மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு,
3ம் தேதி மதுரை மேற்கு, மதுரை மையம், மதுரை தெற்கு, 4ம் தேதி – சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, 5ம் தேதி – கம்பம், போடிநாயக்கனூர், பெரியகுளம், 6ம் தேதி – நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, 7ம் தேதி – ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, 9ம் தேதி – தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 10ம் தேதி – பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, 11ம் தேதி – மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், 12ம் தேதி – திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், 13ம் தேதி – சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம்” செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.