1998ல் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவிற்கு வழங்கி வந்த ஆதரவை அதிமுக வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேச்சு சர்ச்சையானது. அதற்கு இன்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், 2026 தேர்தல் களத்திற்கு முதல் முதலாக வந்துள்ளது அதிமுக தான். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எங்களை வாழ வைத்த தெய்வங்கள். அதிமுகவின் கடைக்கோடி தொண்டர் வரை அந்த உணர்வோடுதான் மறையவில்லை எங்கள் உள்ளத்தோடும் உதிரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க சிறப்பாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த எழுச்சி பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். தொடர்பாக அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர்.
1998ல் பாஜகவுடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் யோசித்து நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலாக முடிவெடுத்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அதில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றதன் காரணத்தினால் தான் பாஜக மத்தியில் முதல்முறையாகஆட்சிக்கு வந்தது
இன்றைக்கு தமிழகத்தின் நலன் கருதி சில பிரச்சனைகளை மையமாக வைத்து மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம்.
அதிமுக வெளியே வந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக வாஜ்பாய் தலைமையிலான அரசியல் பங்கேற்று அவர்களை வளப்படுத்திக் கொண்டனர். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. திமுக பாஜக உடன் சேர்ந்தால் நல்ல கட்சி நாங்கள் ஒன்று சேர்ந்தால் தீண்ட தகாத கட்சியா என்றுதான் கருத்து கூறினேன். எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் தவறுதலாக அரசியல் காரணங்களுக்காக திரித்து கூறப்பட்டிருக்கிறது