நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது. தேர்தலுக்கான காலங்கள் இன்னும் கிடக்கிறது. நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி. அவர் முடிவு எடுக்க முடியாமல் ஏதோ சக்திகள் தடுத்தால் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்,.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 4 மற்றும் 5 மற்றும் 6ம் தேதிகளில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கேடிஆர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய அவர், ஓரணியில் தமிழ்நாடு என்ற கருத்து காலம் முடிந்த பின்பு தான் ஸ்டாலினுக்கு யோசனையாக வந்துள்ளது. ஆட்சி முடிய போகும் நேரத்தில் ஓரணியில் அவரது குடும்பம்தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை என்றார்.
அதிமுக- பாஜக கூட்டணியானதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. எங்களது கூட்டணி பதற்றத்தின் வெளிப்பாடு தான் ஸ்டாலினின் பேச்சாக வெளி வருகிறது. அதிமுக பாஜகவுக்கு அடிமைக் கட்சி கொத்தடிமை என்றால், காங்கிரசுக்கு திமுக அடிமையா? என கேடிஆர் கேள்வி எழுப்பினார்.
திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு பெரும் ஆதரவு தான். அடித்தட்டு மக்களின் வாக்குகள் எங்களுக்கு நிறைய கிடைக்கும். எங்களுக்கு மிகப்பெரிய பலம் தான். முரண்பட்ட கட்சிகள் கொண்ட கூட்டணி திருமாவளவன் வைத்துள்ள கூட்டணி என்று விமர்சித்தார்.
அதிமுக, திமுக தவிர்த்து மற்ற கட்சிகள் விட்டில் பூச்சி மாதிரி. பல கட்சிகள் வரும், ஆனால் தேர்தல் களத்தில் நிற்க முடியாது. பூத் கமிட்டி அமைப்புகள் கூட கிடையாது. நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது. தேர்தலுக்கான காலங்கள் இன்னும் கிடக்கிறது. நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி. அவர் முடிவு எடுக்க முடியாமல் ஏதோ சக்திகள் தடுத்தால் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்
