மதுரையில் வரும் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி தவெக மாநாடு நடத்துவதில் சிக்கல் என தகவல் பரவி வருகிறது.
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு முதலாவது மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதன் இரண்டாவது மாநில மாநாடு வரும் 25-ந் தேதி மதுரை மாவட்டம் எலியார்பத்தி என்ற இடத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பலநூறு ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தை சீர்செய்து மாநாட்டு திடல் அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம் அந்த தேதியில் மாநாடு நடத்த காவல்துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆகஸ்ட் 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி வரவுள்ளநிலையில், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் பயன்படுத்தப்படுவது வழக்கம். எனவே 25-ந் தேதி மாநாட்டுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என்பது போலீஸ் தரப்பின் வாதம்.
அதற்கு பதிலாக 21-ந் தேதி நடத்திக் கொள்கிறீர்களா என தவெகவிடம் காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதற்கு தவெகவினர் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதனால் திட்டமிட்டப்படி மதுரையில் தவெகவின் மாநில மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.