Close Menu
    What's Hot

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மதுரை, கோவை வளர்ச்சிக்கு மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    அரசியல்

    மதுரை, கோவை வளர்ச்சிக்கு மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025Updated:November 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM Stallin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மற்றும் கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிவில், ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்று சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறியதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாக்னிசன்ட் நிறுவனத்தின் புதிய கண்டிஷன் ; அச்சத்தில் அதன் ஊழியர்கள் !!!
    Next Article கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
    Editor TN Talks

    Related Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!.

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.