கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆண்டு சென்சஸ் முடிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு பெரு நகரங்களில் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளதாக கூறி மெட்ரோ ரயில் சேவையை இந்த இரண்டு பெரு நகரங்களுக்கு தர இயலாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்து வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை எக்ஸ் வலதளத்தில் கூறியுள்ளார். அவர் பதிவுத்துள்ள பதிவில்
“அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!”
இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவேற்றியுள்ளார்.
மறுபக்கம் மக்கள், “ தானே, ஆக்ரா, போபால் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை இருந்த பொழுதிலும், அங்கு மட்டும் எப்படி மெட்ரோ ரயில் சேவை எவ்வாறு வழங்கப்பட்டது.” என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.
