மிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் த.வெ.க. நிர்வாகிகள் தென்காசி மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, அங்குள்ள மருத்துவ வசதிகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தனர். மக்கள் நல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்படாத கட்சி நிர்வாகிகள் அரசு அமைப்புகளில் நேரடியாக தலையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மற்றும் சில அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் என். ஆனந்த், “மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு நிர்வாக செயல்பாடுகளில் ஆய்வு செய்வதோ, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சியினர் சட்டப்பூர்வமான மற்றும் அரசியல் ரீதியாக ஏற்ற நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு, கட்சியினரின் செயல்பாடுகள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இதனால் கட்சிக்குள் ஒழுக்கம் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவுரை வெளியிடப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மக்கள் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்லும் போது உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்த அறிவிப்பு வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version