அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியன் அவர்களை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் இருப்பதாலும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தாங்கள் எதிர்த்து வருவதாலும் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏ மற்றும் பி வடிவங்களில் கையெழுத்திட எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அதிகாரம் இல்லை, எனவே அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள இருவரின் வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர், எடப்பாடி பழனிச்சாமி எதிர்பாளருமான திண்டுக்கல் சூரியமூர்த்தி தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியன் அவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.