Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – எச்சரிக்கும் பா. சிதம்பரம்
    அரசியல்

    தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – எச்சரிக்கும் பா. சிதம்பரம்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chidambaram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

    வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மகாதேவ்புரா நாடாளுமன்ற தொகுதியில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் முன்னணி என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டுவந்தார்.

    மகாதேவ்புரா தொகுதியில் பலருக்கு ஓர் எழுத்தில் பெயர் இருந்தது. பலருக்கு கதவு எண் 0 என குறுப்பிடப்பட்டுள்ளது. ஓரு வீட்டில் 120 பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். இதனை எல்லாம் அம்பலபடுத்திய பின்னரும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதியை இழந்தது. போலியான முகவரியை சேர்ப்பது,போலியான நபர்களை சேர்ப்பது போன்ற வகையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது. அவர்கள் பேரில் கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. அதேபோல் குல்பர்கா எம்பி தொகுதியில் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் 10 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். ஆனால் அதே தொகுதியில் 12 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் எம்.பி தோல்வி அடைகிறார்.இப்படி பல மோசடிகள் நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற தகவல்கள் இயற்கைகைக்கு எதிரானதாக அமைந்துள்ளது.

    ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நூற்றுகணக்கான நபர்கள் குடிபெயர்ந்து விட்டனர்,காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான திள்ளுமுள்ளு செய்துள்ளது. வாக்கு திருட்டு மகாராஷ்டிரா கர்னாடக போன்ற மாநிலங்களில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம். தமிழகத்தில் சதியை பின்னக்கூடிய பாரதிய ஜனதா கட்சி உள்ளது.தமிழகத்தில் அதனை நடக்க விடமாட்டோம் அதே போல் கேரளாவிலும் நடக்காது. நாம் தான் வலிமையான அணி அதற்கு எதிரான அணி பலவீனமான அணி என சொல்ல கூடாது. திமுக தமிழகத்தில் வலிமையான அணி அதிமுக வலிமையை குறைத்து மதிப்பிட மாட்டேன் எனபேசினார்.

    மேலும், அதிமுக வலிமையை குறிப்பிட்டு திருக்குறளை மேற்கோள் காட்டிய சிதம்பரம், தமிழகத்தில் கட்டுகோப்பான அணிகள் உள்ளது என்றும், தமிழகத்தில் திமுக அணி, அதிமுக அணி என இரண்டு அணிகள் இருந்தால் வாக்கு வாக்கு திருட்டு நடக்காது, ஆனால் தற்போது அதிமுக அணியில் பாஜக புகுந்து உள்ளது. ஆமை புகுந்த வீடும்  அமினா புகுந்த வீடும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல் பாஜக புகுந்த வீடு உருப்படாது. அவர்களது கூட்டணி உருப்படாது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வாக்கு திருட்டு நடப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. மே மாதம் வரை தமிழகத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் தவறான ஒருவரை கூட நீக்கவும் சேர்க்கவும் அனுமதிக்க கூடாது மகாராஷ்டிரா கர்நாடகாவில் நடந்ததை போல் தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பு உருவாக்கிவிடும்.

    .வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் கூட்டணி P. Chidambaram warns of potential vote theft  வைத்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. டி.எம். சேஷன் இருந்த தேர்தல் ஆணையம் தற்போது கோமாளிகளால் நடத்தப்படுகிறது. இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்குத்திருட்டை தடுத்து தமிழகத்தில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என விமர்சித்து பேசினார்.

    BJP congress Election Commission nellai maanadu p chidambaram vote theft
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது… நயினார் நாகேந்திரன் பேட்டி…
    Next Article சூடு பிடிக்கும் தமிழக அரசியல்… திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026

    ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!. EPS திட்டம்!.

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    February 15, 2026

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.