Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இட்லி, வடை சாப்பிட போனேன் ப்ரோ..விஜயை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி கொடுத்த விளக்கம்
    அரசியல்

    இட்லி, வடை சாப்பிட போனேன் ப்ரோ..விஜயை சந்தித்தது ஏன்? காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி கொடுத்த விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025Updated:December 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pra chak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராகுல் காந்தியின் ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டெல்லிக்கு புகார் அனுப்பினர். இந்நிலையில், தான் விஜயை சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு எனவும், இதனால் காங்கிரஸ் – திமுககூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் விஜயின் இல்லத்தில் இரவு நேரத்தில், ராகுல்காந்தியின் ஆலோசகரும், காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி இடையே நடந்த சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சந்திப்பு முதலில் ரகசியமாகவே இருந்தது. ஆனால் தகவல் வெளியானதும், அது காங்கிரஸுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தக்கூடிய பேச்சுவார்த்தையை பிரவீன் சக்கரவர்த்தி தனிப்பட்ட முறையில் நடத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துது.

    மேலும், வரும் தேர்தல் மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட அவரே நேரடியாக விருப்பம் தெரிவித்தார் என்ற செய்தியும் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும், தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் இது ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. திமுக தலைமையும் இந்தச் சம்பவம் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும், கூட்டணியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது எனவும் திமுகவினர் நேரடியாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டுகிறது.

    விஜய் சந்திப்பு 2026 தேர்தலில் திமுகவின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தனியாக வெற்றி பெரும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதால், சில தமிழக தலைவர்களே இதற்குடெல்லி தலைமையிடம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை தொடர்பு கொண்ட திமுக தரப்பு, பிரவீன் சக்கரவர்த்தி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், கூட்டணி நிலைப்பாடு குறித்து டெல்லி தலைமை தெளிவாக விளக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் விவகாரம் விபரீதமாவதை உணர்ந்த பிரவீன் சக்ரவர்த்தியே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில்,” அனைத்து சந்திப்புகளுக்கும் பின்னால் அரசியல் சார்ந்த விவகாரங்கள் தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியாது. விஜயை சந்தித்தது தவறான விவகாரம் என எனக்கு தோன்றவில்லை. தவெகவில் நான் இணையப் போவதாகவும் சொல்கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் இது ஒரு சாதாரண சந்திப்பு தான்..

    திரைப்படங்கள் குறித்து பேசுவதற்கான சந்திப்பாக கூட இருந்திருக்கலாம். இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற சாதாரண சந்திப்பு தான் இது. இதனால் திமுக கூட்டணியில் குழப்பம் வரும் என்பதெல்லாம் உண்மை இல்லை. சொல்லப்போனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை” என விளக்கம் அளித்திருக்கிறார்.

    காங்கிரஸ் புகார் கடந்த சில தினங்களாகவே காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழக கூட்டணி அமையலாம் என பேசப்பட்டு வந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. ஏற்கனவே சொன்னது போல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் டெல்லி தலைமைக்கு கடிதம் அனுப்பிய நிலையில், தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே தற்போது இந்த விளக்கத்தை பிரவீன் சக்கரவர்த்தி அளித்திருக்கிறார் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article100 நாள் வேலையில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக- அன்புமணி காட்டம்
    Next Article அதிமுக பொதுக்குழுவில் பிரம்மாண்ட விருந்து
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.