Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“தமிழகத்தில் வாக்கு திருட்டு நடந்தால் புரட்சி வெடிக்கும்” – பிரேமலதா விஜயகாந்த்
    அரசியல்

    “தமிழகத்தில் வாக்கு திருட்டு நடந்தால் புரட்சி வெடிக்கும்” – பிரேமலதா விஜயகாந்த்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    ஈரோட்டில் தேமுதிக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார்.

    முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.

    மின் கட்டண உயர்வால் நெசவுத் தொழிலை நம்பியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரி உயர்வால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. மக்கள் எங்களிடம் தெரிவிக்கும் குறைகள் குறித்து நாங்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கிறோம். திமுக அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. எஞ்சிய காலத்தில் மற்ற வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    தமிழகத்தில் ஒரு எம்ஜிஆர் தான், ஒரு விஜயகாந்த் தான். இருவருடைய இடத்தையும் வேறு யாரும் நிரப்பமுடியாது. திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் வடமாநிலத்தவர் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் இங்கு பணியாற்றலாம். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது.

    அவரவர் சொந்த மாநிலத்தில் தான் வாக்குரிமை இருக்க வேண்டும். வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் மூலம் வாக்குத் திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆண்ட கட்சியாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது.

    தேர்தல் முடிவு வெளியாகும்போது கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும், அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும். அதிமுக மாநிலங்களை உறுப்பினர் பதவி தருவதாக கூறி எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் 2025-ம் ஆண்டில் கேட்டோம், அவர்கள் 2026 இல் தருவதாக கூறியுள்ளார்கள்.

    ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேமுதிக கூட்டணியை முடிவு செய்யாது. கடந்த 2011-ம் ஆண்டு நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் விரும்பிய கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அவர் காட்டிய வழியில் 2026 தேர்தலில் தேமுதிக கூட்டணியை முடிவு செய்யும். ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 01.12.2025 | கார்த்திகை 15 – விசுவாவசு
    Next Article “திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனை” – மல்லை சத்யா கணிப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.