Close Menu
    What's Hot

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“திருப்பரங்குன்றம் முருகன் மீது ஏன் திடீர் பாசம்?” – இந்து அமைப்புகள் மீது சீமான் சீற்றம்
    அரசியல்

    “திருப்பரங்குன்றம் முருகன் மீது ஏன் திடீர் பாசம்?” – இந்து அமைப்புகள் மீது சீமான் சீற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seemaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “பல கோடி மக்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வழியில்லை. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கிறார்கள். திடீரென முருகன் மீது ஏன் இவ்வளவு பற்று வருகிறது?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

    அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    பல கோடி மக்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வழியில்லை. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கிறார்கள்.

    இத்தனை ஆண்டுகள் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள்? இப்போதுதான் இவர்களது கண்களுக்கு முருகன் தெரிகிறாரா?. திடீரென முருகன் மீது ஏன் இவ்வளவு பற்று வருகிறது? மலைகளில் கல்குவாரி உருவாக்கி அழிக்கும்போது யாரும் வருவதில்லையே. ஏனென்றால் 2 மாதத்தில் தேர்தல் வருகிறது. சாதி, மத, உணர்ச்சி என்பது எப்போதும் ஆபத்தானது.

    பாஜகவின் சிந்தனை ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குவது அல்ல. அதைப் பிரித்து, சிதைத்து தங்களுக்கான அதிகாரத்தை நிறுவுவது தான் பாஜகவின் கோட்பாடு. அதை இந்த நிலத்திலும் நிறுவ நினைக்கிறார்கள். ஒற்றுமையாக இருக்கிற தமிழ் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். தமிழர்களுக்கு இறைவழிபாட்டை சொல்லிக்கொடுக்க அவர்கள் நினைப்பது தான் இதில் வேடிக்கை.

    அதற்காக ஓர் அமைதியாக இருக்கும் சமூகத்தை குலைப்பதற்கான முயற்சியை நீதிபதி செய்வதுதான் வருத்தமாக இருக்கிறது. எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லும் என்றால், இந்த நாட்டை நிர்வகிப்பது சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களா அல்லது நீதிமன்றமா? இது அற்ப அரசியலாகும்.

    தமிழகத்தில் இந்தப் பிளவுகளை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இதற்கு அதிமுகவும் கூட்டணி தர்மத்துக்காக எதிர்த்துப் பேச மறுக்கிறது, எஜமான் கோபித்துக்குக் கொள்வார் என்று. இதையெல்லாம் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தேர்தலில் நிச்சயம் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் டிச. 9ல் தவெக பொதுக் கூட்டம்!
    Next Article கும்பகோணம் அருகே +2 மாணவர் கொலை…. அன்புமணி அதிர்ச்சி
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    அணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    Trending Posts

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    April 6, 2026

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.