செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் வைத்து விஜய் முன்னிலையில் அக்கட்சியில் செங்கோட்டையன் இன்று சேர்ந்தார். இதையடுத்து தவெக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கான அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றில் அவர் விரைவில் நியமிக்கப்படக் கூடும், கட்சி விதிகளில் திருத்தம் செய்தபிறகு இதற்கான அறிவிப்பு வெளியிடப்படக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
