நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் வெற்றி பெற்று இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்க் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் தொடங்கப்பட்ட #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை, நடத்தப்பட்ட முகாம்கள் – 632, பயன்பெற்றவர்கள் – 9,86,732, மருந்து பெற்றவர்கள் – 5,65,924,இதில், தூய்மைப் பணியாளர்கள் – 65,363, மாற்றுத் திறனாளிகள் – 39,475.
இப்படி, இந்தத் திட்டத்தில் ஏழை – எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர் என்ற தரவு மகிழ்ச்சி அளிக்கிறது!
புற்றுநோய், இருதயநோய், காசநோய் எனப் பலருக்கும் தொடக்க நிலையிலேயே நோய்கள் கண்டறியப்பட்டு, அவர்களது மேல் சிகிச்சையும் #FollowUp செய்யப்படுவதை இத்திட்டத்தின் முக்கிய வெற்றியாகப் பார்க்கிறேன்.
அடுத்தடுத்து நடைபெறவுள்ள முகாம்கள் மேலும் சிறப்பாக அமைந்திட, நீங்கள் சொன்ன கருத்துகளை அதிகாரிகளுக்கு உத்தரவுகளாக வழங்கியிருக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
