திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று திண்டுக்கல் வந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காகவும் நவராத்திரி விழாவிற்காக பாரத பிரதமர் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய இந்த முறையை கொண்டுவந்துள்ளார், இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பாஜக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வந்துள்ளோம் எனவும் நாளையில் இருந்து ஜி எஸ் டி வரி குறைகின்றது, பெரும்பாலும் 5 சதவிகிதம் வரை குறைகின்றது, குறிப்பாக 5 சதவிகிதத்தை 0 வாக
ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் இருந்தால் இருவரும் பயன்பெறும் வகையில் இருக்கும்…
28 சதவிகித கட்டுமான பொருட்கள் விலை 10 சதவிகிதமாக குறைவு. சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் குறைக்கப்படாமல் இருந்தால் அது குறித்து நுகர்வோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேஸ்ட் பல்பொடி , சோப் உள்ளிட்ட பொருட்கள் 27 சதவிகித்ததில் இருந்து 5 சதவிகிதமாக குறைப்பு. பாலுக்கு வரி கிடையாது. நடுத்தர மக்கள் பயன்பெற ஏர் கண்டிசன் 18 சதவிகிதமாக குறைப்பு. சைக்கிள் வரி குறைப்பு.
22 சதவிகித்தில் இருந்து இருந்து 5 சதவிகிதமாக குறைப்பு. ஹோட்டல் வரி 19 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைப்பு. வரி குறைப்பால் அத்தியாவசிய பொருட்களை பல மடங்காக பெருக்கி உற்பத்தி கூடும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நாளையில் இருந்து நவராத்திரி ஆரம்பம் ஆக உள்ளதால் இது அமுல்படுத்தபடுகிறது. மற்ற தலைவர்கள் இது போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்கள்…
1947 இல் இருந்து கூடிய வரியை குறைத்த ஒரே அரசாங்கம் இந்த மோடி அரசாங்கம் மட்டுமே. நானும் நாளை நவராத்திரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறினார்.