Close Menu
    What's Hot

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ பாட்டுப் பாடும் விஜய் கூட மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை: சீமான்
    அரசியல்

    ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ பாட்டுப் பாடும் விஜய் கூட மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை: சீமான்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8057712 seeman1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கடலம்மா மாநாடு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பணகுடி பகுதியில் மேய்ச்சல் நில உரிமையை நிலைநாட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. திருநெல்வேலியில் சீமான் தங்கியிருந்த கட்சி நிர்வாகி திருமண மண்டபத்தின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அவர் போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், இன்று பிற்பகலில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “பணகுடி பகுதி மலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களை அரசே ஆக்கிரமிக்கிறது.

    தமிழக சட்டப் பேரவை தலைவருக்கு அங்கே நிலம் இருக்கிறது. அரசின் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நான் பணகுடி சென்றால் பிரச்சினையாகிவிடும் என்பதால் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

    கால்நடைகளின் வாழ்விடத்தில் அவைகளுக்கு அனுமதி வழங்காமல் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது; தமிழக தேவைகளுக்கு மட்டும் மணல், கற்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்தினால் 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த முடியும்.

    தமிழகத்தின் பால் தேவையை ஆந்திர மாநிலம் பூர்த்தி செய்கிறது. அங்கிருந்து வரும் பால் தூய்மையானதா என்ற கேள்வி எழுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் ஒரு தோல்வியுற்ற திட்டம். சென்னையில் மெட்ரோ திட்டங்கள் மூலம் தூண்களாகவே நகர் காட்சியளிக்கிறது.

    அது சிங்காரச் சென்னை இல்லை, தூண் சென்னை ஆக உள்ளது. நாங்கள் இருப்பதால் பரந்தூர் விமான நிலையம் வராது. மக்களுக்கு மறைமுகமாக இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை மூலமாக பணம் கொடுக்கப்படுகிறது.

    இலவச திட்டங்கள் அவசியம் இல்லை. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. திமுகவிற்கு மாற்று அதிமுக அல்ல.

    திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே எந்தக் கொள்கை மாற்றமும் இல்லை. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு பாடும் தம்பி விஜய் கூட ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையை மூடுவேன் என சொல்லவில்லை.

    பிஹாரில் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாஜக வெற்றியை பெற்றுவிட்டது. அதுபோல் தமிழகத்தில் பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்கலாம். ஏன் ரூ.5 ஆயிரம்கூட கொடுக்கலாம்.

    வாக்கிற்கு பணம் கொடுக்காத மாற்று அரசியல் தமிழகத்தில் தேவை” என்று அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅட இனி இங்கேயும் தனியார் நிகழ்வுகளை நடத்திக் கொள்ளலாமா ; உற்சாகத்தில் மக்கள் !!!
    Next Article பெண் மையக் கதையில் மீண்டும் கல்யாணி!
    Editor TN Talks

    Related Posts

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர் கைது

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.