Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது மட்டுமே முதலமைச்சரின் கவனம்..
    அரசியல்

    டாஸ்மாக் வருமானத்தை பெருக்குவது மட்டுமே முதலமைச்சரின் கவனம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025Updated:June 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

    சமீபத்தில் கூட தமிழகத்திற்கு வர வேண்டிய பாக்ஸ்கான், HCL நிறுவனங்களின் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு, ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக, தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலினோ, “முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் வருடா வருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்.

    “புலி வருது, புலி வருது” என்ற கதையாக தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே. அது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிடச் சொன்னாலோ அல்லது ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி (எண் 185) என்னவாயிற்று எனக் கேள்வி கேட்டாலோ முதல்வரிடம் பதிலில்லை.

    இவ்வாறு அபார ஆற்றலும், அசாத்திய திறமைகளையும் கொண்ட நமது தமிழக இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளையும், வளமான எதிர்காலத்தையும் அமைத்துத் தராமல் தங்கள் மோசடிகளை மூடி மறைப்பதிலேயே முழுக் கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வரும் அவரது அமைச்சர்களும் அரசுப் பதவி வகிக்க துளியும் தகுதியற்றவர்கள். நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-ல் முடிவு கட்டப்படும்!

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    CM focus on liquor income DMK liquor policy Tamil Nadu alcohol sales TASMAC controversy TASMAC politics TASMAC profit vs public welfare TASMAC protest TASMAC revenue Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு
    Next Article பெங்களூர் கூட்ட நெரிசல் – காங்கிரஸ் பதவி விலக வேண்டும்.. பாஜக வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.