Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“வெறுப்பை உமிழும் விஜய்” – திருமாவளவன் குற்றச்சாட்டு
    அரசியல்

    “வெறுப்பை உமிழும் விஜய்” – திருமாவளவன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17811750 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசு மீது விஜய் வெறுப்பை உமிழ்வதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    வேலூர் விஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஆளுநர் மாளிகைக்கு இதுவரை ராஜ்பவன் என்று இருந்த பெயரை இப்போது “லோக் பவன்’, அதாவது “மக்கள் மாளிகை’ என மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம்.

    தவெக தலைவர் விஜயை கண்டு திமுக அச்சப்படுவதாக எழுப்பப்படும் கேள்வியே ஒரு சார்பு உடையதாக உள்ளது. விஜயை பார்த்து திமுக பயப்படுவதாக தாங்களாக முடிவு செய்து கொள்ளக் கூடாது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த அச்சமும் இல்லை. முதன்முதலில் விஜய் அரசியலுக்கு வந்ததை வாழ்த்தி வரவேற்ற இயக்கம் விசிக. ஆனால், அவர் இதுவரை கொள்கை சார்ந்த அரசியல் பேசாமல், வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார். உடனடியாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் எனும் வேட்கையுடன், ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பதை கடந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டுள்ளார்.

    விசிக இதுவரை தனிநபர் விமர்சனம் எதையும் செய்தது இல்லை. அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்ததும் இல்லை. அவர்கள் முன் வைக்கக்கூடியது கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல் ஆளும் கட்சிக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதாக இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளை வரும் தேர்தலில் பெற முயற்சி செய்யப்படுமா என கேட்கிறீர்கள்.

    ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தொகுதிகளை எழுதித் தருகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு உடன்படிக்கை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும்.எஸ்ஐஆர் வேண்டாம் என்பதுதான் எங்கள் முழுநோக்கம். அதேநேரம், நீட்டிப்பு செய்திருப்பதை இயற்கை சூழலை கருத்தில் கொண்டு பார்க்கிறேன்.’’ என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல்கலைக்கழகங்களை திவாலாக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    Next Article திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு
    Editor TN Talks

    Related Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.