அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஹரித்துவார் செல்வதாக கூறிவிட்டு திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்தித்து பேசியுள்ளார். அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே அமிஷ்தாவிடம் கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செங்கோட்டையனுக்கு முன்னதாக டிடிவி தினகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அது தள்ளிபோனதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று தினகரன் அமித்ஷாவை சதிக்கலாம் என்றும், அவரை தொடர்ந்து சசிகலாவும் அமித்ஷாவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.