Close Menu
    What's Hot

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்
    அரசியல்

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    17811750 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமுகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

    இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதன பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

    கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார். இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும்.

    இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கட்சி நிலைபாட்டையே மறந்துவிட்டார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி சாடல்
    Next Article 5 நாளில் 6 கோடி பார்வைகள்: ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ ஆச்சர்யம்
    Editor TN Talks

    Related Posts

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026

    திமுக 176 இடங்களில் போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

    February 20, 2026

    கோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இளைஞர்களே நோட்!. சென்னையில் ஆப்பிள் புதிய அலுவலகம்!. ஆட்சேர்ப்பு பணிகள் தொடக்கம்!

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    மகளிர் டி20!. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

    February 21, 2026

    ஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.