நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களுன் சந்திப்பு என்ற பெயரிலான தேர்தல் பிரசாரத்தை நடிகரும், தவெக தலைவருமான விஜய் மேற்கொள்ள உள்ளார்.
இதுபற்றி அக்கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு
அனைவருக்கும் வணக்கம்.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு:
நாகப்பட்டினம் மாவட்டம்:
இடம்: நாகப்பட்டினம்,
புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு,
நேரம்: காலை 11.00 மணி
திருவாரூர் மாவட்டம்:
இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதி
நேரம்: மாலை 3.00 மணி
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்!
இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.