தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது..
நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மீனவ நண்பனா உங்கள் விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை எல்லாம் நாகையில் இருக்கம் என்று கேவிப்பட்டுள்ளேன் மீன் விவசாயம் எப்படி பார்த்தாலும் உழைக்கும் மக்கள் இருக்கு ஊர் தான் நாகை.மதவேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டா வாழ்ற உங்களக்கு மீண்டும் சிரம்தாழ்ந்த ஸ்பெஷ்ன்ல வணக்கங்கள்
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனா, அங்க நவீன வசதிகளோட மீன் பதப்படுத்துற தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கூட இல்லாம குடிசைகள் அதிகமாக இருப்பதும் நாகை தான். முன்னேற்றத்திற்கு எல்லாம் எங்க ஆட்சி தான் சாட்சி., அடுக்குமொழி பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா? மக்கள் தவியா தவிக்குறாங்களே பத்தாதா?.
இலங்கை கற்படைறயால் மீனவர்கள் தாக்கப்பட்றதையும், அதுக்கான காரணத்தையும், அதுக்கான தீர்வை பத்தியும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது ஒரு தப்பா. அது ஒரு குத்தமா? இன்று நேற்றா நான் குரல் கொடுக்கிறேன். இதே நாகையில் 14 வருஷ்ம் முன்னாடி 2011-ம் ஆண்டு பிப்ரவரி 22 மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினேன். விஜய் களத்திற்கு வர்றது புதுசு இல்ல. எப்பவோ வந்தாச்சு. முன்னாடி விஜய் மக்கள் இயக்கம். இப்போ தவெக அரசியல் இயக்கமா வந்து நிக்குறோம். அதுதான் வித்தியாசம். என்றும் மக்களோட மக்களோட நிக்குறது தான். புரிய வேண்டியங்களுக்கு புரிஞ்சா சரி.
மீனவர்களுக்காக குரல் கொடுக்குற இதே சமயத்துல, தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகின் எந்த நாட்டுல இருந்தாலும் அவங்களுக்காக நிற்பது நம்ம கடமை.
கடிதம் எழுதிட்டு கப்சிப்-ஆ போகிற கபடநாடக திமுக அல்ல நாங்கள். மற்ற மீனவர்கள் எல்லாம் இந்திய மீனவர்கள், நம்ம மீனவர்கள் தமிழக மீனவர்கள் என்று சொல்கிற பாசிஸ பாஜக கிடையாது. நிரந்தர தீர்வு தான் நம்மளோட அஜெண்டா.
நாகை ஏரியாவுக்கு வருவோம். இங்க இருக்குற மண்வளத்தை பாதிக்கிற இறால் பண்ணைகளை முறைப்படுத்தணும். மீனவர்கள் விவசாயிகள் பாதிக்காமல இருக்க நடவடிக்கை எடுக்கணும். அலையாத்தி காடுகளை காப்பாற்ற வேண்டும்.
இதைவிட முக்கியமான வேலை முதலமைச்சருக்கு இருக்கிறது. என்ன வேலை தெரியுமா? சொந்த குடும்ப நலனையும், சுயலநலத்தையும் பார்த்துகிறது தான் அவங்க வேலை. இங்க மக்கள் குடிக்க தண்ணி இல்லாம தவிக்கிறாங்க, காவிரி தண்ணிய கொணடு வந்தாங்களா? மீனவர்கள் அதிகமா இருக்கக்கூடிய இந்த பகுதியில் கடல்சார் கல்லூரியை கொண்டு வந்தாங்களா? மீன் தொழிற்சாலை அமைச்சாங்களா? தொழில் வளர்ச்சியை பெருக்குனாங்களா? ஆனா ஒவ்வொரு வெளிநாட்டு முதலீடு வர்றதா சிஎம் சிரிச்சிக்கிட்டே சொல்வார். சிம் சார் மனச தொட்டு சொல்லுங்க, வெளிநாடு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?
ஒட்டுமாத்த தமிழ்நாட்டிற்கு முதலீடா, உங்க குடும்ப முதலீடு வெளிநாட்டிற்கு போகுதா?
வேளாங்கண்ணி, கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தலங்களை முன்னேற்றலாம். வேதாரண்யம் உப்பு ஏற்றுமதி செய்து தரலாம். செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்குற டாக்டர் இல்லயாம். நாகை பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கலாம். நாகை ரயில் நிலையத்தை மேம்படுத்தலாம். ஏற்கனவே இங்கிருந்த ரயில்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அதனை திறப்பது பற்றி யோசிக்கலாம். மேலக்கோட்டை மேம்பாலம் கட்டி 50வருஷம் ஆச்சி. அதனை புனரமைக்கலாம்.
தஞ்சை – நாகை நெஞ்சாலை பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. அதனை வேகமாக செய்து முடிக்கலாம். நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு கிடங்குகள் கட்டித் தரலாம்.
தேர்தலுக்கு முன்பாக திமுகவினர் வருவார்கள். செய்யாத எல்லாத்தையும் செஞ்ச மாதிரி சொல்வார்கள். நம்பாதீர்கள். பெரம்பலூரில் பிரசாரம் செய்ய முடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
சீக்கிரம் வருவேன்.
எதுக்காக சனிக்கிழமைகளில் பிரசாரம் என்று பலர் கேலி பேசுகிறார்கள். உங்க எல்லாரையும் பார்க்கும்போது உங்களுக்கும் தொந்தர இருக்கக்கூடாது என்பதற்காக தான். ஓய்வு நாளில் வரும்போது யாருக்கும் தொந்தரவு இருக்காது. அரசியலில் சிலபேருக்கு ஓய்வு கொடுக்கணும், அதனால் தான் சனிக்கிழமையை தேர்வு செய்தேன்.
எனக்கு மட்டும் பிரசாரத்திற்கு எத்தனை கட்டுப்பாடு, அனுமதி மறுப்பு, காரணங்கள் கேட்டா சொத்தையா இருக்கும். அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது, 5 நிமிஷம், 10 நிமிஷம் தான் பேசணும், நான் பேசுறதே 3 நிமிஷம் தான். நான் எதைத்தான் பேசறது.?
அரியலூர் பேசும்போது பவர் கட், தி-ருச்சியில் ஸ்பீக்கர் ஒயர் கட்., முதலமைச்சர் சார், உதாரணத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் வரும்போது கண்டிஷன் போடுவீங்களா? பவர் கட் பண்ணுவீங்களா? இந்த மாதிரி ஒயர் கட் பண்ணுவீங்க. கட் பண்ணி தான் பாருங்களே. முடியாதுல , பேஸ்மெண்ட் அதிரும்ல. நீங்க தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே..
பேருந்துக்கு வெளிய இருக்கக்கூடாது ரூல்ஸ் போட்டீங்க,. கை காட்டாத, சிரிக்காத, கை அசைக்காதனு ரூல்ஸ்,. செம்ம காமெடியா இருக்கு. நேரடியாக கேட்குறேன்.சிஎம் சார் மிரட்டி பார்க்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்ல சார். என் செஞ்சிடுவீங்க. கொள்கையை வச்சிட்டு கொள்ளை அடிக்கிற உங்களுக்கு இவ்வளோ இருக்குனா, சொந்தமாக உழைச்சு சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு இருக்கும்.
நாங்க என்ன பெருசா கேட்டுட்டோம். மக்கள பார்க்க ஒரு இடம். அதுக்கு பர்மிஷன். நாங்க கேக்குற இடத்தை விட்டுட்டு நெருக்கடியான இடத்தை தேர்வு செய்து தருகிறீர்கள். நான் மக்களை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என்னதான் சார் உங்க எண்ணம்.
தமிழ்நாட்டு மகனா, சொந்தக்காரனா, என் சொந்தங்களை பார்க்க போனா அப்பவும் தடை போடுவீங்களா.
அடக்குமுறை, அராஜக அரசியல் வேண்டாம். நான் தனி ஆள் இல்ல. மாபெரும் மக்கள் சக்தியயோட பிரதிநிதி., பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமா இருக்கோம் சார்.
2026 ரெண்டு பேர் இடையில் தான் போட்டி. ஒன்று தவெக, இன்னொன்னு திமுக. இந்த பூச்சாண்டி வேலை காட்றத விட்டுட்டு தில்லா, நேர்மையா தேர்தல சந்திக்க வாங்க. பார்த்து விடலாம். கொள்கையை பேருக்கு மட்டும் வச்சிக்கிட்டு குடும்பத்துக்காக கொள்ளை அடிக்கற நீங்களா, தமிழ்நாட்டு ஒவ்வொரு வீட்ல இருக்கா நானா பார்த்துடலாம் சார்.
இனி தடைபோட்டா நேரடியாக மக்கள்ட்ட பர்மிஷன் கேட்டுறவேன். மக்களே சொல்லுங்கள் உங்கள பார்க்க கூடாதா பேசக்கூடாதா உங்க குறையா கேட்கக் கூடாதா? திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரணுமா?
தவெக ஆட்சி அமையணுமா? சத்தம் கேட்டுச்சா சிஎம் சார் இந்த போர் முழக்கம் உங்களை தூங்க விடாது. துரத்திட்டு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.