இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5 வது டெஸ்ட் தொடரில், பென் டக்கெட் மற்றும் சாய் சுதர்சன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி 2 போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையிலும், 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று பின்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5வது டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால் மட்டுமே இந்தப் போட்டி டிராவில் முடிவடையும்.

கடந்த 31-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய கடைசி போட்டியில் முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது.

அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியின் 2வது இன்னிங்சில் சாய் சுதர்சன் 11 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ரிவியூ எடுத்தும் பலனில்லாமல் போனது. அவர் பெவிலியன் திரும்பிய போது, பென் டக்கெட் அவரை நோக்கி ஏதோ கூறி வம்பிழுத்துள்ளார்.

இதனால் கடுப்படைந்த சாய் சுதர்சன் திரும்பி வந்து பென் டக்கெட் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஹாரி புரூக் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் இணைந்து சாய் சுதர்சனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version