இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், அவரது தோழி சானியா சந்தோக்கிற்கும் இன்று (மார்ச் 5) மும்பையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. மும்பையின் நட்சத்திர ஹோட்டலான ‘தி செயின்ட் ரெஜிஸில்’ (The St. Regis) நடைபெற்று வரும் இந்த திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி, கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச், ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பாஸ்ரா, ஜாகீர் கான் மற்றும் சாகரிகா கட்கே, இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் குடும்பத்தினர்.
https://x.com/WorshipDhoni/status/2029448062280839548?
குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடிகளாக தோன்றி அனைவரின் கவனத்தையும் தோனி தம்பதியர் ஈர்த்துவிட்டனர். ஒரே மாதிரி மேட்ச்சிங் உடையில் வந்த தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் போட்டோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன், ஷாருக்கான் மற்றும் கௌரி கான், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆமிர் கான், ஃபர்ஹான் அக்தர், ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
