17வது ஆசிய உலக கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

17வது ஆசிரிய கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடந்த இருந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அபுதாப்பிக்கு மாற்றப்பட்டது.

8 அணிகள் பங்கேற்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், பி பிரிவில், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த நிலையில் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் வரும் 14ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறது இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் ஆசிய உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஊர்வசி ஜெயின் தலைமையிலான சட்ட கல்லூரி மாணவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையில், இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version