Asia Cup 2025: 17 வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்ந்து துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய தொடரில் ஏ மற்றும் பி பிரிவுகளில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் போட்டியில் 8 சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் சர்தேச போட்டிகளில் 4 முறை பலபரீட்சை செய்துள்ளன. இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்திய அணி பலம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆசிய கிரிக்கெட் கோப்பை குறித்து பேசிய யுஏஇ கேப்டன் முகமது வாசீம், முழு திறமையையும் வெளிப்படுத்தினால் இந்தியா உட்பட எந்த அணியையும் வீழ்த்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிய போட்டிக்காக கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ள அவர், தங்களால் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என கூறியுள்ளார்.