இந்தியாவில் மிகப்பெரிய வியாபார இடமாக பார்க்கப்படுவது ஐபிஎல் தொடர்கள் தான். வருடத்திற்கு ஒருமுரை நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர்பில் பணம் கோடிக்கணக்கில் விளையாடும். குறிப்பாக மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்சிங் என சூதாட்டங்களும் நடைபெறும். அப்படி கடந்த 2013-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிகெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் ஊழல் நடைபெற்றது. இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட காலகட்டம் எனலாம். இந்த ஸ்பாட் பிக்சிங்கில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சந்திலா, அங்கீத் சவான் ஆகிய மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்டது.

இதே வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவான், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். மும்பை கிரிக்கெட் சங்கம் சவானை 14 வயதுக்குட்பட்ட மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் அங்கீத் சவானுக்கு 2013ம் ஆண்டு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. ஆனால் 2021ம் ஆண்டு இந்த தடை, ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version