ராஞ்சியில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு 350 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜெய்ஸ்வால் 18, ரோஹித் சர்மா 57, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது  சதத்தை பதிவு செய்தார். 102 பந்துகளில் 103 ரன்களை கோலி அடித்தார். இதில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும்.

சதத்தை பதிவு செய்தபிறகு அதிரடியாக கோலி விளையாடினார். அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்சரை விளாசிய அவர், 120 பந்துகளில் 135 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் கே.எல். ராகுல், 60 ரன்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 32 ரன்களிலும், அர்ஸ்தீப் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை எடுத்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version