Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»IND vs NZ ODI| ஒரு மேட்ச்!. 5 மெகா ரெக்கார்டுகள் செய்த விராட் கோலி!. 
    விளையாட்டு

    IND vs NZ ODI| ஒரு மேட்ச்!. 5 மெகா ரெக்கார்டுகள் செய்த விராட் கோலி!. 

    Editor web3By Editor web3January 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    virat kohli
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில்  நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது.

    301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 91 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல் கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணியில் கையில் ஜேமீசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது  ஜனவரி 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது.

    களமிறங்கும் ஒவ்வொரு மேட்ச்சிலும் ஏதோவொரு சாதனையை விராட் கோலி படைத்துக்கொண்டே இருக்கிறார். அதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 93 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு வருத்தமளித்தாலும், அந்த போட்டியில் மட்டும் அவர் 5 மெகா ரெக்கார்டுகளை படைத்துள்ளார்.

    அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் கோலி. மொத்தமாக 28,016 ரன்கள் எடுத்துள்ளார்.

    2வது சாதனையாக, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி. (1,750 ரன்கள்).

    இந்தியாவுக்காக ஒருநாள் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளா விராட். 309 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அனைத்து பார்மெட்களிலும் 3வது வரிசையில் களமிறங்கி 100 அரைசதங்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி.

    மேலும் அனைத்து பார்மெட்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக 3,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக பலே பிளான்!. அண்ணாமலை களமிறங்கும் தொகுதி எது தெரியுமா?.
    Next Article தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது!. இன்றைய நிலவரம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026

    ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்!. இந்தியாவுக்கு 5 தங்கம்!. வீராங்கனைகள் அபார சாதனை!

    April 11, 2026

    கடைசி வீரரும் விடைபெற்றார்!. 96 வயதில் மறைந்தார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சி.டி.கோபிநாத்!.

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.