இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. நான்காவது போட்டி இன்று கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
டிராவிஸ் ஹெட், ஹேசல்வுட் என இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதனால் கேப்டன் மிட்சல் மார்ஷுடன், இன்று மாத்யூ ஷார்ட் துவக்கம் தர காத்திருக்கிறார். அதுதவிர கடந்த 3 போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இருந்த ‘ஆல் ரவுண்டர்’ மேக்ஸ்வெல் வருகை அணிக்கு பலம் சேர்க்கிறது.
இந்தப் போட்டியில் ஆஸி.,யைத் தோற்கடித்து இந்திய அணி தொடரில் முன்னிலை பெறுமா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்துள்ளனர்.
