இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இந்தியா பின் தங்கியுள்ள நிலையில், கடைசி தொடரில் இந்தியா வெற்றி பெற்று போட்டியை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி தொடர் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. லேசான மழை சாரல் காரணமாக டாஸ் நிகழ்வு 3 நிமிடங்கள் தாமதமானது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்திருந்தார். அதனால் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து திணறியது.
கருண் நாயர் மட்டும் இத்தொடரில் தனது முதல் அரை சத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (19), கருண் நாயர் (52) அவுட்டாகாமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர்.
முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களையும், ஜோஷ் டங் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.