தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று (டிச.3) தேர்வு செய்யப்படவுள்ளது.
தெ.ஆப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தாெடரில் 2 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டித் தொடர் முடிந்ததும், டி20 போட்டித் தொடர் தொடங்கவுள்ளது.
2 அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் வருகிற 9-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, சண்டிகரில் 11-ம் தேதி 2வது டி20 போட்டியும், தர்மசாலாவில் 14-ம் தேதி 3வது டி20 போட்டியும், லக்னோவில் 17-ம் தேதி 4வது டி20 போட்டியும், அகமதாபாத்தில் 19-ம் தேதி 5வது டி20 போட்டியும் நடக்கின்றன.
இந்நிலையில், ராய்ப்பூரில் இன்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர். ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
