2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில், இலங்கை அணிக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற போதிலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 212 ரன்கள் குவித்தது. அரையிறுதிக்குத் தகுதி பெற இலங்கையை 147 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது.  இலங்கை கேப்டன் தசுன் ஷனகா (76*) மற்றும் பவன் ரத்நாயக்க (58) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை 207 ரன்களை எட்டியது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணியிடம் இழந்தது.

இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நியூசிலாந்து இரண்டாவது அணியாகத் தகுதி பெற்றது.

இந்திய அணியின் நிலை: இன்று ‘வாழ்வா-சாவா’ போராட்டம்: பாகிஸ்தான் வெளியேறிய நிலையில், இந்திய ரசிகர்கள் அனைவரின் பார்வையும் இன்று (மார்ச் 1) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் போட்டியின் மீது திரும்பியுள்ளது.

குரூப் 1-ல் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. ஜிம்பாப்வே வெளியேற்றப்பட்டுவிட்டது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.

கடந்த போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 256 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஃபார்மில் உள்ளனர்.

ஒருவேளை இன்றைய போட்டி மழையினால் கைவிடப்பட்டால் (Reserve Day இல்லை எனில்), ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும், இந்தியா வெளியேற நேரிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version