இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI), IPL அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( KKR) அணிக்கு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது .
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை 2026 ஐபிஎல் ஏலத்தில் ₹9.20 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியது.வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய வன்முறையைத் தொடர்ந்து, கேகேஆர் மற்றும் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன . பிசிசிஐயும் விமர்சிக்கப்பட்டது. பல முக்கிய அரசியல்வாதிகள் ஐபிஎல்லில் வங்கதேச வீரர் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பினர். சர்ச்சை அதிகரித்ததைக் கண்ட பிசிசிஐ தலையிட்டு, முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது.
பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் வாரியம் தனது முடிவை கேகேஆர் அணிக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார். “முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் மாற்று வீரரைக் கோரலாம், கோரிக்கையின் பேரில், பிசிசிஐ மாற்று வீரரை அனுமதிக்கும்,” என்று சைகியா சனிக்கிழமை அன்று பிடிஐயிடம் தெரிவித்தார்.
