விஜய் ஹசாரே டிராபி தொடரில் பிகார் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், வெறும் 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 310 ஆகும் ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் நடந்த பிகாரின் மூன்றாவது பிளேட் குரூப் போட்டியில், 218 ரன்கள் இலக்கை துரத்திச் சென்றபோது வைபவ் சிறப்பாகத் தொடங்கினார். எனினும், 14 வயதான அவர், ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆகாஷ் குமார் வீசிய பந்தில் திப்புவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆட்டமிழந்தார். அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தினார். 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து, பிகார் அணி 397 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியைப் பெற உதவினார். அத்துடன், 36 பந்துகளில் சதமும், 59 பந்துகளில் 150 ரன்களும் எடுத்து, ஒரு இந்திய வீரர் அடித்த நான்காவது அதிவேக லிஸ்ட் ஏ சதத்தைப் பதிவு செய்தார்.

சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த உலகின் இளம் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். மேலும், லிஸ்ட் ஏ போட்டியில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ரன்களை எட்டியதே சாதனையாக இருந்தது. வைபவ் அதனை 59 பந்துகளில் கடந்து புதிய மைல்கல்லை எட்டினார்.

தேசிய கிரிக்கெட் கடமைகள் காரணமாக, வைபவ் சூர்யவன்ஷி விஜய் ஹசாரே டிராபியின் எஞ்சிய போட்டிகளில் பிகார் அணிக்காக விளையாட வாய்ப்பில்லை. டிசம்பர் 27 சனிக்கிழமை அன்று, இந்தியாவின் U19 உலகக் கோப்பை அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இது அவரது இளம் வயதிலேயே கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாகும். இந்திய வீரர்களுக்கு திருப்பி தருவோம்.. இனி பின்வாங்க மாட்டோம்.. பாகிஸ்தான் வாரிய தலைவர் மோசின் நக்வி உலகக் கோப்பைக்கு முன்னதாக, வைபவ் U19 அணியுடன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பார்.

மணிக்கட்டு காயம் காரணமாக ஆயுஷ் மாத்தே மற்றும் அவரது துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் இல்லாததால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரில் வைபவ் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார். காயப்பட்ட மாத்ரே மற்றும் மல்ஹோத்ரா இருவரும் U19 உலகக் கோப்பையில் இடம்பெற்றாலும், இந்தத் தொடரில் விளையாட மாட்டார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version