எண்ணூர் அனல்மின் நிலையத்தின் விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊரணமேடு கிராமத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தின் இருந்து 2 யூனிட்களின் மூலம் தலா 600 மெகாவாட் வீதம் 1.320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறாது. இந்த சூழலில் அனல் மின் நிலையத்தில் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் இருந்த போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் கீழே விழுந்ததுடன், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணியின் போது அலட்சியமாக இருந்ததாக ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.