Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொது தேர்வு தேதி சொல்லியாச்சு – மாணவர்களே ரெடியா..?
    தமிழ்நாடு

    பொது தேர்வு தேதி சொல்லியாச்சு – மாணவர்களே ரெடியா..?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 4, 2025Updated:November 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3,317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 08.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11.03.2026 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். செய்முறைத் தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.

    மேலும் பேசிய அவர், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2026-இன்படி 2025-26-ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பிறக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் ஜூன்2026-ஆம் ஆண்டு வரை மேல்நிலை 11 ஆம் வகுப்பு தேர்வு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 வரை நடைபெறவுள்ளது. செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் 2025-26 பொதுத்தேர்வு முதல் 12-ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    10 12 பொது தேர்வு anbil mahesh Public exam அன்பில்மகேஷ் பொதுத்தேர்வு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉடனே செக் பண்ணிடுங்க.!! இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
    Next Article சிறப்பு பொதுக்குழு கூட்டம்: கட்சியினருக்கு விஜய் கட்டுப்பாடு
    Editor TN Talks

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.