நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 353 பொறியியல் கல்லூரிகள், 827 கலை அறிவியல் கல்லூரிகள், 459 பாலிடெக்னிக் கல்லூரிகள், 412 தொழிற்பயிற்சி மையங்களில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2022 – 23 கல்வியாண்டில் 13.5 லட்சம் மாணவர்களும், 2023 – 24 கல்வியாண்டில் 14.68 லட்சம் மாணவர்களும், 2024 – 25 கல்வியாண்டில் 13.17 லட்சம் மாணவர்களும் நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.
மணவர்களின் உயர்கல்வி வழிகாட்டி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற இறுதியாண்டு மாணவர்கள் 2.52 (51%) லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம் 3 லட்சம் முதல் 31 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற்று 51 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி சேராமல் இருந்த மாணவர்கள் மற்றும் உயர்கல்வியில் சேர்ந்த இடைநின்ற மமாணவர்களை “உயர்வுக்குப்படி” எனும் திட்டம் மூலம் 2024ம் ஆண்டு வரை 72 ஆயிரம் மாணவர்களை நான் முதல்வன் திட்டம் மீண்டும் உயர்கல்வியை தொடர வைத்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று குடிமை பணிகள் தேர்வில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 89 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பாண்டில் குடிமை பணிகளுக்கான தேர்வில் 50 பேரும் IFS தேர்வில் 10 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பாண்டில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் தற்போது வரை 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் மூலம் குடிமை பணிகளுக்கான தேர்வு, மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு உண்டு உறைவிட பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
