Close Menu
    What's Hot

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மேற்கு ஆசியாவில் சிக்கிய 593 தமிழக மீனவர்கள்!. இப்போது மீட்பது சாத்தியமில்லை!. கைவிரித்த மத்திய அரசு!.
    தமிழ்நாடு

    மேற்கு ஆசியாவில் சிக்கிய 593 தமிழக மீனவர்கள்!. இப்போது மீட்பது சாத்தியமில்லை!. கைவிரித்த மத்திய அரசு!.

    Editor web3By Editor web3March 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fisherman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற 593 தமிழக மீனவர்கள் அங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், “தற்போதைய சூழலில் மீனவர்களை வெளியேற்றுவது சாத்தியமில்லை” என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

    ஈரானில் சிக்கியுள்ள சகாய ஜெனிஷ் ராஜ் மற்றும் ஜூடலின் ஆகிய மீனவர்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரானிய அரசாங்கம் தற்போது வான்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாலும், போர்ச் சூழலாலும் உடனடி மீட்பு நடவடிக்கை சாத்தியமில்லை” என்று விளக்கமளித்தார்.

    மனுதாரர்கள் தரப்பில் கூறுகையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் உணவின்றியும், போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இன்றியும் தவித்து வருவதாகத் தெரிவித்தனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தரப்பில், ஈரானில் மொத்தம் 593 தமிழக மீனவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. மத்திய அரசின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் விவரங்களைத் தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேச எழுந்து நிற்கும் போதெல்லாம், நாங்கள் தடுக்கப்படுகிறோம்!. ராகுல் காந்தி ஆவேசம்!.
    Next Article வெடித்து சிதறிய டயர்!. ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்!. நூலிழையில் தப்பிய உயிர்!
    Editor web3
    • Website

    Related Posts

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    March 12, 2026

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.