உலகப் பிரசித்தி பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மலர் கண்காட்சிக்காக 1.75 லட்சம் ரோஜா, கார்ப்பரேஷன், கிரைசாந்தி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ராஜா சோழன் அரண்மனை, அரண்மனை நுழைவாயில், ராஜா சிம்மாசனம், அன்னப் பறவை, யானை, புலி உள்ளிட்ட 24 மலர் சிற்ப வடிவமைப்புகளை பார்வையிட்டு வருகிறார்.

இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரும், நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தமிழக அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version