தோழி விடுதி கட்டடங்களை தொடங்கி வைப்பதோடு, புதிய தோழி விடுதி கட்டிடங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
மேலும், சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிக்க: மயக்கமடைந்து தொடர் சிகிச்சையில் இருந்த தாய் யானை உயிரிழப்பு!
இந்த நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர், சமூக நலத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.