Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»77வது குடியரசு தின விழா!. சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!.
    தமிழ்நாடு

    77வது குடியரசு தின விழா!. சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!.

    Editor web3By Editor web3January 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chennai airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் 77வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி கொண்டாடுவதை ஒட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி. சென்னை விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு வரும், 30 ஆம் தேதி நள்ளிரவு வரை, அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24,25,26 ஆகிய 3 நாட்கள், உச்சக்கட்ட பாதுகாப்பாக, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி,சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினா், மோப்ப நாய் உதவியுடன், சோதனையிடுகின்றனா்.அதைப்போல் வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். விமானநிலைய வளாகத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசாா், ரோந்து வந்து, தொடர்ந்து கண்காணிக்கின்றனா்.

    மேலும் விமானநிலைய மல்டி லெவல் காா் பாா்க்கிங்கிற்குள், நீண்ட நேரமாக நிற்கும் காா்கள், பைக்குகள் போன்ற வாகனங்களை,வெடிகுண்டு நிபுணா்கள் திவீரமாக சோதனையிட்டு, கண்காணிக்கின்றனர். அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின், அதிரடி வீரர்கள், மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும், தீவிரமாக சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    அதைப்போல் BCAS பாஸ்கள் வழங்குவதிலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிகளில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது, கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து,விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து, 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா்.

    அதைப்போல் விமான பயணிகளுக்கும்,பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன், மேலும் ஒரு முறை, விமானங்களுக்குள் உள்ளே செல்லும் இடத்தில், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகிறது.குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும், கைப்பைகளை துருவித்துருவி சோதிக்கின்றனா்.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய்,அல்வா,ஜாம்,எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன.அதைப்போல் விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும், தீவிரமாக கண்காணித்து,பாா்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனா்.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால்,உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு, ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும்,சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு, சென்னை விமானநிலைய அதிகாரிகள்,பயணிகளை அறிவுறுத்தியுள்ளனா்.

    சென்னை விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும், விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்குகின்றன. எனவே பயணிகள் அச்சமின்றி, வழக்கம்போல் அனைத்து விமானங்களிலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகலை, இலக்கிய விருதுகளில் அரசியல் குறுக்கீடு ஆபத்தானது!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article ‘காங்கிரசிடம் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை’!. பிரதமர் மோடி பேச்சு!.
    Editor web3
    • Website

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.