எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை கைது செய்வது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தங்களது கைது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றுவிட்டு கரை திரும்பியுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 8 மீனவர்களையும் படகோடு சேர்த்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசரணைக்காக அழைத்து சென்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version