கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் டெர்ஹ்வித்துள்ளது. இதற்கிடையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது வடக்கு திரையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால், கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவெடுத்த நிலையில் இன்று (24.05.2025)மாலை கரையை கடக்க இருக்கக்கூடிய நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை,கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.