Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின்கோரி மனு.. ஒத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம்…
    தமிழ்நாடு

    நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின்கோரி மனு.. ஒத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4a15e97d 421c 40e0 bef9 37be5422793d
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, இதே வழக்கில் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு நீதிபதி, எஸ்.ஹெர்மிஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணைக்கு அழைத்த போது தாம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறினார்.

    மேலும், மருத்துவ பரிசோதனையில் தாம் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாகவும் கிருஷ்ணாவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமையை மீறிய செயல் என்றும் தெரிவித்தார். மேலும், எதனடிப்படையில் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

    நடிகர் ஶ்ரீகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தம்மிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளதாக கூறினார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிகெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய வீரர்… பயிற்சியாளர் பதவி… மும்பை அணி அதிரடி…
    Next Article மறுதேர்வுகோரிய நீட் மாணவர்கள்.. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..
    Editor TN Talks

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.