மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுவை முன்மொழிய உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தொடங்கியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சாபில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் படிவத்தில் எம்எல்ஏக்களின் கையெழுத்து பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களரான வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோரது வேட்பு மனுக்களை முன்மொழியும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இருவரது வேட்பு மனுக்களும் முறையாக தயார் செய்த பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
