மேட்டுப்பாளையத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கும் நெடுஞ்சாலையில் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் 30 பேர் கைது..காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் அருகே அன்னூர் நெடுஞ்சாலையில் 5 முக்கு சந்திப்பு சிக்னல் அருகே கழிவு நீர் வெளியேறி வருகிறது..கழிவு நீர் வெளியேறி சாலை சேதமாவதோடு அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இதனை சீரமைக்க மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இப்பிரச்சனை இரு மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காத மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கழிவு நீர் வெளியேறும் நெடுஞ்சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்..
மேட்டுப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தென்னங்கன்றுடன் நாட்டு நடும் போராட்டத்திற்கு அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நகர்மன்ற குழு தலைவர் முகமது சலீம் முன்னிலையில் கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர்..
உரிய அனுமதியின்றி போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்த சென்ற அதிமுகவினரை மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர்..
அப்போது, சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட அதிமுக வினர் முயன்றனர்..நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்..
அப்போது, போலீசாருக்கும் அதிமுக வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது..ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்..