Close Menu
    What's Hot

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி… அன்புமணி குற்றச்சாட்டு
    தமிழ்நாடு

    அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி… அன்புமணி குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 5.31 லட்சம் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
    அவர் வெளியிட்ட அறிக்கையில், இதுகுறித்து கூறப்பட்டு இருப்பதாவது:

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் 5.31 லட்சம்  குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் & ஆசிரியர்கள் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2022&23ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 37,658 அரசு பள்ளிகளில்  50 லட்சத்து 42,026 மாணவர்கள் பயின்று வந்தனர். இது 2023&24ஆம் ஆண்டில் 48 லட்சத்து 40.034  ஆகவும், 2024&25ஆம் ஆண்டில் 45 லட்சத்து 10,612 ஆகவும் குறைந்திருக்கிறது. அதாவது இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.

    திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், திமுகவின் ஒட்டுமொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்  அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்கு குறைந்து வருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த 2015&16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 45.10 லட்சமாக குறைந்து விட்டது என மத்திய அரசே தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி கூறி வந்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

    அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக போதிய நிதி ஒதுக்காதது, ஆசிரியர்களை நியமிக்காதது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகியவை ஆகும். இரண்டாவது, தனியார் பள்ளிகள்  வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிப்பது ஆகும். இந்த இரு வழிகளிலுமே அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு  திமுக காரணமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக  தேர்தல் அறிக்கையில் ‘‘மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020-& 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாக இருந்தது. இது 2020&-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%ஆகும். 2024-&25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், கல்விக்கு ரூ.44,042 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.

    அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் குறைந்தது 15% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 22&ஆம் இடத்தில் உள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு  வெகு காலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் 2022&23ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2024&25ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7884 குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வந்தால், மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியாது.

    அடுத்ததாக பத்தாண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது  63.42 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறியதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகிறது.

    அரசு பள்ளிகளை மேம்படுத்தியவர் கர்மவீரர் காமராசர் என்றால், அவற்றை சீர்குலைத்தது திமுக அரசு தான் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத அளவுக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனையாகும். இந்த சீரழிவை திமுக அரசால் சரி செய்ய முடியாது. அடுத்து அமையவுள்ள ஆட்சியில் இந்த சீரழிவுகளை சரி செய்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பா.ம.க நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா வரும் மெஸ்ஸி!. ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சமா?. கடும் விமர்சனங்கள்!
    Next Article தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்ட அறப்போராட்டம்… ராமதாஸ் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    ச்சீ! ச்சீ!. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!. இபிஎஸுக்கு ஆ.ராசா பதிலடி!

    April 5, 2026

    4 நாட்களில் ரூ.6 கோடி அதிகமான விஜய் சொத்து!. திருத்திய பிரமாண பத்திரத்தில் தகவல்!

    April 5, 2026

    இன்று முதல் அண்ணாமலை பிரச்சாரம்!. வானதி மற்றும் எல்.முருகனுக்காக தீவிர வாக்கு சேகரிப்பு!.

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    Trending Posts

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026

    வீட்டு சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு!. எவ்வளவு தெரியுமா?

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.